அரசாங்கம் வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய்கள் செலவிட்டு 7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்குவைத்து பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
வறுமையொழிப்பு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் ‘உணவுப் பற்றாக்குறையால் எந்தவொரு பிரஜையும் பட்டினியால் இருத்தல் ஆகாது’ எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்கீழ் வறுமை மற்றும் போசாக்கு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் காணப்படுகின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் பெற்றுக்கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போசாக்கான பகலுணவு வேளையை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.