தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணக் கொடுப்பனவை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை தேயிலை சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று பாராளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கடன் அடிப்படையில் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தேயிலை சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.