November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் விடுத்த அறிவித்தல்!

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித தடையும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து மக்கள் அநாவசியமாக அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியில் 45 வீதத்தை மீள அறவிடுவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.