January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் ஒக்டோபர் 3 ஆம் திகதி இரவு இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள், எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்கள் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் என்பனவும் அத்தியாவசிய சேவைகளாக விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.