May 25, 2025 10:57:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராட்டத்தில் குதித்த முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலனறுவை நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு, நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.