January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விலை மீண்டும் குறைகிறது!

சமையல் எரிவாயு விலையை மேலும் குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி விலை குறைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகளுக்கு ஏற்பட்ட எரிவாயு விலைச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட அளவில் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.