ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 6 ஆம் நடக்கவுள்ளது.
பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் குறித்த பிரேரணையை முன்வைத்துள்ளன.
பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலேயே அந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை வெளிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அரசாங்க உயர்மட்ட குழுவொன்று நேற்றைய தினம் மீண்டும் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது.