க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் சிலர் இன்று கோரிக்கை விடுத்தனர்.
2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு சில வாரங்களுக்கு முன்னரே வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றுவோருக்கு டிசம்பரில் நடக்கும் பரீட்சைக்கு தோற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் பரீட்சையை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தற்போதைய நிலைமையில் பரீட்சையை மேலும் ஒத்தி வைத்தால் அடுத்த வருடத்தில் பாடசாலை தவணைகள் மேலும் தள்ளிப் போகும் என்று குறிப்பிட்டார்.
ஆகவே பரீட்சையை மேலும் ஒத்தி வைப்பது சிக்கலானது என்றும், ஆனால் இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு தான் அறிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.