ஒக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 750 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிகரெட் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கு அமைய இது வரையில் 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிகரெட் 85 ரூபாவாகவும், 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிகரெட் 90 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வரிகள் அதிகரிக்கப்பட்டமையே இந்த விலை அதிகரிப்புகளுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.