அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கூறும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இவ்வாறான செய்திகளை பரப்பி நாட்டு மக்களைத் தூண்டி விடுவதற்காக சிலர் முயற்சிக்கின்றனர் என்றும், அதனை தாம் கண்டிப்பதாகவும் கூறியுள்ள அவர், அரச ஊழியர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.