November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்து!

twitter/ranil wickremesinghe

கொழும்பில் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஸ்தாபித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

இதன்படி பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம், உயர் நீதிமன்ற வளாகம்,  மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம்,  ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை  கடற்படை தலைமையகம்,  பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள் உள்ளிட்ட பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டிருந்தன.

அரச இரகசிய சட்டத்தின் கீழ் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிப்பது, அந்த சட்டத்தின் விடயதானங்களுக்கு உட்படாதது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், அதற்கு எதிர்ப்பையும் வௌியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரத்து செய்யும் வகையில் ஜனாதிபதி நேற்று இரவு புதிய வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.