ஒக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலைகளை குறைப்பதற்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்புக்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 410 ரூபாவாகவும், 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Price of Petrol 92 will be reduced by Rs 40 per liter & Price of Petrol 95 by Rs 30 per liter from midnight today. The new price for Petrol 92 will be Rs 410 per liter & Petrol 95 Rs 510 per liter. Prices on other petroleum products will remain the same. pic.twitter.com/ULHGe8gCVo
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 1, 2022