நீதி அமைச்சரினால் பாராளுமன்றத்ததில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்திற்கு பல்வேறு தரப்பினருரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த சட்டமூலம் போராட்ட செயற்பாட்டாளர்களை இலக்காக கொண்டதாக இருக்கலாம் என்று சிவில், அரசியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி, நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பிற்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள், நாசகார செயலில் ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செய்வதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.