தேசிய சபையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுடன், இதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தேசிய சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதமர் தினேஸ் குணவர்தன, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.