January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் ஜனாதிபதியுடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்தித்துள்ள்ளார்.

கொழும்பில் மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்வில் பிரதம அதிதியாக சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே அவர் இருவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.