இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையில், நாட்டில் ஒவ்வொரு 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை எனவும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமையால் நிலவும் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் உணவு உட்கொள்வதை குறைத்து வருவதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.