அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடும் போது பின்பற்ற வேண்டியவை தொடர்பில் பொதுநிருவாக, உள்நாட்டலுவர்கள் அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் மாயாதுன்னேவினால் இந்த சுற்றறிகை வெளியிடப்பட்டுள்ளது
ஏற்கனவே இந்த விடயங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை பின்பற்றுமாறு நினைவூட்டும் வகையிலேயே புதிய சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த சுற்றறிக்கைகளை மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.