ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்கியுள்ள ஹோட்டலுக்கு முன்னால் இலங்கையர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டோக்கியோ நகரில் உள்ள இம்பிரியல் ஹோட்டலுக்கு முன்னாலே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.