January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய சிங்கப்பூர் ஆர்வம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்துள்ளார்.
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதனை வரவேற்றுள்ள பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.