முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நவம்பரில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இதற்கு முன்னர் கூட்டணியொன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் அங்கம் வகித்த பல்வேறு கட்சிகள் வெளியேறி சுயாதீன அணிகளாக செயற்படுகின்றன.
இவ்வாறான நிலைமையிலேயே சாகர காரியவசம் புதிய கூட்டணியொன்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிட்டுள்ளார்.