நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மூன்று மின் பிறப்பாக்கிகளில் ஒரு மின் பிறப்பாக்கி திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்கத்தில் இருந்த இரண்டு மின் பிறப்பாக்கிகளில் ஒன்று, இன்று காலை முதல் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதனடிப்படையில், 900 மெகாவாட் மின்சாரத்தை விநியோகித்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில், தற்போது 300 மெகாவாட் மின்சாரத்தை பிறப்பிக்கும் ஒரு மின் பிறப்பாக்கி மாத்திரமே செயற்படுகின்றது.
இதனால் நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.