சிறுநீரக நோய் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சீன அரசாங்கத்தினால் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் 660 மில்லியன் ரூபாவாகும் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நடமாடும் ஆய்வுகூட வாகனங்களை அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் ஆய்வுகூட வாகனங்களில் சீனாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today, 8 state-of-the-art CKD (Chronic Kidney Disease) Screening Vehicles (mobile labs) worth LKR 660 million donated by #China entered commissioning in 8 CKDu affected areas, i.e. Anuradhapura, Polonnaruwa, Vavuniya, Trincomalee, Ampara, Kurunagala, Matale, Badulla.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 26, 2022