முல்லைத்தீவு குருந்தூர் மலை பிரதேசம் பௌத்தர்களுடையது என்றும், அதனை பாதுகாக்க நடவடிக்கையெடுக்குமாறு பௌத்த திணைக்களத்தை வலியுறுத்தியும் கொழும்பில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் ”முல்லைத்தீவு குருந்தூர் தேசிய மரபுரிமையை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
சுதந்திர சதுக்க வளாகத்தில் இருந்து பௌத்த விவகார திணைக்களம் வரையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் பௌத்த தேரர்களும், பௌத்த அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, குருந்தூர் மலை மற்றும் திருக்கோணேஸ்வரம் ஆகிய விடயங்களில் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இதனை தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.