அரச பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புக்கு தகுதி பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா உதவித் தொகை வழக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி நிதியிலிருந்து இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதல் தடவையில் தோற்றி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களு இந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வி வலயமொன்றில் இருந்து 30 பேர் என்ற அடிப்படையில், நாடளாவிய ரீதியில் 99 கல்வி வலயங்களை சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கவுள்ளது.
இந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்ள தகுதி பெறும் மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் வழங்கப்படும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.