ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னரே புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அந்தத் தாக்குதலைத் தடுக்க தவறியுள்ளதாக குறிப்பிட்டு, அப்போதிருந்த அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் தாக்குதல் காலத்தில் பிரதமராக பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிப்பதால் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை தொடர முடியாது என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு தீர்மானித்துள்ளது.