January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இனப் பிரச்சனைக்கு தீர்வு இன்றி தேசியப் பேரவையில் இணைய மாட்டோம்”

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தேசியப் பேரவையில் இணைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது தாம் அந்தப் பேரவையில் இணையப் போவதில்லை என சுமந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் முன்வைக்குமாக இருந்தால் அதன் பின்னர் தமது முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.