January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பான் பயணமானார் ஜனாதிபதி ரணில்!

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை அவர், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜப்பான் நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதலில் ஜப்பானுக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

அதனையடுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸுக்கு பயணமாகவுள்ளார்.

இந்தப் பயணங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளதால், அவர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு இராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக  ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி  பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.