பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி அமைக்கப்படவுள்ள தேசிய சபைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
டக்ளஸ் தேவானந்தா, ஹாபிஸ் நசீர் அஹமட், டிரான் அலஸ், சிசிர ஜயக்கொடி, சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாவுல்லா, திஸ்ஸ விதாரண, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பழனி திகாம்பரம், மனோ கணேசன், உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பெயர்களும் தேசிய சபைக்கு முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும் நாமல் ராஜபக்ஷ, ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரத்ன, அலி சப்ரி ரஹீம், சி.வி. விக்னேஸ்வரன், வீரசுமன வீரசிங்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளடங்குகின்றன.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் டலஸ் அழகப்பெரும அணி என்பன தமது தரப்பு உறுப்பினர்களின் பெர்களை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.