கதிர்காமம் பிரதேச சபை செப்டம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கதிர்காமம் பிரதேச சபையின் அதிகாரங்கள் மொனராகலை உதவி மாகாண ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைவக்கப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தே அந்த பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.