பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி ரணிய் லிக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை வெளிநாட்டு தூதுவர்களை ஜனாதிபதி சந்தித்தார்.
23 நாடுகளின் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இலங்கை நிச்சயம் இப்பிரச்சினையிலிருந்து மீண்டெழும் என்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தேவையான அனைத்து அர்ப்பணிப்புக்களை செய்து வருவதாகவும் ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.