நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயணக் கட்டுப்பாட்டை விதிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறு பயணங்களை மேற்கொள்ளும் போது, அவசிய தேவைகளுக்காக அழைத்துச் செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.