இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் நியூயோர்க் சென்றுள்ளார்.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்தில் அவரை சந்தித்து அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடனின் பாரியாரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பொதுச் சபைக் அமர்வில் நாளைய தினம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்த உரையாற்றவுள்ளார்.