January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டொலருக்கு மட்டுமே புதிய எரிவாயு சிலிண்டர் விநியோகம்!

உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிப்போர், டொலரை செலுத்தி இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையை முன்னெடுக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை எரிவாயு விநியோகம் தற்போது வழமைப் போன்று முன்னெடுக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.