அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்லும் போது அணிய வேண்டிய ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்கள் பொருத்தமான அலுவலக உடைகளை அணிய வேண்டும் என்றும், இது தொடர்பான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து செயற்படுவதாகவும், இதனாலேயே புதிய சுற்றறிக்கையை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.