June 1, 2025 2:44:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பந்தனை பதவி நீக்க ஆலோசனையா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இரா.சம்பந்தனை பதவி நீக்க கலந்துரையாடப்படுவதாக வௌியாகும் தகவல்களை கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.

சம்பந்தனை குறித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்காக அவருடன் கலந்துரையாடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அது தொடர்பில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், அவ்வாறாக குழுவெதுவும் நியமிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

குறித்த கூட்டத்தில், திருகோணமலை திருக்கோணேஷ்வரர் ஆலய சூழலில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய நிர்மாணப் பணிகள் தொடர்பில் சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கே தீர்மானிக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.