January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருந்தூர் மலை விவகாரம்: யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம் அறிக்கை!

Photo: Facebook/ uojusu

முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று உலக சமாதான தினம் அனைத்து நாடுகளினாலும் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையிலும் இலங்கையில் வாழும் தமிழ்மக்களினால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

‘குருந்தூர் நில அபகரிப்பிற்கு எதிரான மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

”முல்லைத்தீவில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலமான குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் எதேச்சதிகாரத்தின் மூலம் விகாரை ஒன்றினை அத்துமீறி அமைத்து வருகின்றது. ஏற்கனவே அங்கு தமிழர்கள் வழிபட்டு வந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த நிலையில் தண்ணீர் முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.