April 30, 2025 9:33:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

பிரிட்டனின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் 18ஆம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.