உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
2021 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 53 நாடுகளின் உணவுப் பணவீக்கம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிம்பாவே முதலிலிடத்திலும், லெபனான் இரண்டாமிடத்திலும், வெனிசுலா மூன்றாமிடத்திலும் இருப்பதுடன் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் ஒரு வருடத்தில் அது 90.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் துருக்கி, ஈரான், ஆர்ஜென்டினா, மோல்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.