பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை அனுராதபுரத்தில் ஆரம்பமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகெகாண்டுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான கையெழுத்து திரட்டும் வாகன பேரணி இன்று அனுராதபுரத்தை வந்தடைந்துள்ளது.