January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தை பார்வையிட மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி!

பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் மற்றும் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம், செப்டம்பர் 20 முதல் பொதுமக்கள் அதனை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்வையாளர் களரி மீண்டும் திறக்கப்படவுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாராளுமன்றத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியை பெற www.parliament.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 011 2 777 473 அல்லது 335 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் ஒன்றை அனுப்புவதன் மூலம் அனுமதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், அரச பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இதே நடைமுறை பின்பற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.