January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக கூறி இந்தப் பெண், பல்வேறு நபர்களை ஏமாற்றி ஒவ்வொருவரிடமும் 50 இலட்சம் முதல் 70 இலட்சம் ரூபா வரையில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

46 வயதான இரு பிள்ளைகளின் தாயான சந்தேகநபர், நாட்டின் பல பகுதிகளிலும் வாடகை வீடுகளில் வசித்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், அவரை நீர்கொழும்பு எத்துகால பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தெதரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.