January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாராணிக்கு ஜனாதிபதி ரணில் அஞ்சலி செலுத்தினார்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சனிக்கிழமை பிரிட்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை  அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் இன்றைய தினம், இலங்கையில் தேசிய துக்கத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.