January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாடசாலை நேரத்தை 4 மணி வரை நீடிக்க வேண்டும்”

பாடசாலை நேரத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பிற்பகல் மாலை 4 மணி வரையாவது பாடசாலை நேரத்தை நீடிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ள பகுதியில் நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கல்விக்கு மேலதிகமாக விளையாட்டுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும், இதற்கு ஏற்றால் போன்று பாடசாலை நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

விளையாட்டை ஒரு பாடமாக கருதி குறைந்தது 2 மணித்தியாலங்களாவது பிள்ளைகளை விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.