January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5000 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு!

Sri Lanka Bureau of Foreign Employment official facebook

இந்த வருட இறுதியில் 5000 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளை கிடைக்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் இலங்கையர்கள் தென்கொரியாவுக்கென வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேலும் 5000 பேர் இந்த வருட இறுதியில் தென்கொரியா செல்லவுள்ளதாக காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.