May 25, 2025 17:47:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலைப் புலிகளின் புதையலை தேடி யாழில் அகழ்வுப் பணி!

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கம் உள்ளிட்ட பெருமதியான பொருட்களைத் தேடி யாழ்ப்பாணம், இருபாலை பகுதி காணியொன்றில் அகழ்வு பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட குழுவொன்று கனரக வாகனங்கள் ஊடாக இந்தப் பணியை முன்னெடுக்கின்றது.

குறித்த காணியில் விடுதலைப் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் குறித்தப் பகுதியில் அகழ்வு பணியை முன்னெடுக்க பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.