இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை – இந்திய சமூகம் கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் 15 ஆம் திகதி நடத்திய ஒன்றுகூடல் நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக ஒருங்கிணைப்பே இந்தியாவுடனான இலங்கையின் உறவைத் தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை இலங்கையில் நிறுவ இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.