April 17, 2025 17:07:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிந்தியில் பிரபலமாகும் ‘மெனிகே மகே ஹிதே’

இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவினால் பாடப்பட்ட ´மெனிகே மகே ஹிதே´ சிங்களப் பாடலின் ஹிந்தி பதிப்பு வெளியாகியுள்ளது.

ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேங்க் கோட்’ திரைப்படத்தில் யொஹானி அந்தப் பாடலை ஹிந்தியில் பாடியுள்ளார்.

அந்தப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளதுடன், 24 மணி நேரத்தில் யுடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதேவேளை கடந்த வருடத்தில் சிங்களத்தில் அந்தப் பாடலை யொஹானி டி சில்வா வெளியிட்டிருந்த நிலையில், அந்தப் பாடல் யூடியுப்பில் சாதனை புரிந்திருந்தது.