May 4, 2025 6:58:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வருட இறுதியில் 25,000 அரச ஊழியர்கள் ஓய்வு!

இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வு தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைய 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்கும் சுற்றறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

இதேவேளை பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்காத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதியமில்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கையும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.