January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ரணில் பிரிட்டன் பயணமானார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டனுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி, கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பிரிட்டன் நோக்கி பயணமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இந்தப் பணத்தை தொடர்ந்து அடுத்த வாரமளவில் ஜப்பானுக்கு பயணமாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.