January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க இந்தியா எதிர்பார்க்கவில்லை!

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்குவதற்கு இந்தியா எதிர்பார்க்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவினால் இலங்கைக்கு கடன் சலுகை அடிப்படையில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில், இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.